ஜெயலலிதா நினைவு இல்லம் அரசின் கொள்கை முடிவு!

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்ற கொண்டுவரப்பட்ட சட்டத்தை எதிர்த்து தீபக் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ் சமூகத்திற்கு முக்கிய பங்களித்த முதலமைச்சர்கள், தலைவர்கள் என 17 பேர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக பராமரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மறைந்த தலைவர்களின் இல்லங்களை கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்றுவது புதிதல்ல எனவும், இது அரசின் கொள்கை முடிவு எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், தனது அதிகாரத்திற்கு உட்பட்டே அரசு சட்டம் இயற்றியதாக குறிப்பிட்டு, தீபக்கின் மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

 

Exit mobile version