பெண் வளர்ச்சிக்காக சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் ஜெயலலிதா தான்: அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் பெண் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூடியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துக் கொண்டு, ஆயிரத்து 200 ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பேசிய அவர், நாளைய சமுதாயம் குழந்தைகள் கையில் என்பதை உணர்ந்து, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். பெண் குழந்தைகளை கருவில் கொல்லும் நிலை தமிழகத்தில் மாறியுள்ளதாகவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். பெண் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் சிந்தித்து செயல்பட்ட ஒரே தலைவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புகழாரம் சூடினார்.

Exit mobile version