அதிமுக எனும் மாபெரும் சகாப்தம்! பொன்விழா கண்ட அதிமுக!

2022 அக்டோபர் 17ம் தேதி தனது 50வது வருட பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது ஒன்றரை கோடி தொண்டர்களைக்கொண்ட ஒரே மக்கள் பேரியக்கமான அதிமுக.
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சுமார் 35 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் இருந்த அதிமுக கொண்டுவந்த அத்தனை திட்டங்களும் சகாப்தம் படைத்திருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் செய்யமுடியாத சாதனைகளை அதிமுக செய்திருக்கிறது.

தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக.
1977ல் முதலமைச்சரான புரட்சித்தலைவர் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதித்தார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவி 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று அந்த சாதனையை படைத்தார்.
அதிமுகவின் இத்தகைய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியவர்கள்அதன் ஒன்றரைகோடிக்கும் அதிகமான தொண்டர்களே. அதன் காரணமாகவே 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் கண்டார் புரட்சித்தலைவி. 37 தொகுதிகளில் வாகை சூடி, இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி வேறெந்த மாநில கட்சிகளும் படைக்கமுடியாத சாதனையை படைத்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் சகாப்தம் படைத்தது அதிமுக.

தேர்தல் பிரசாரத்துக்கே செல்லாமல் ஆட்சியைப் பிடித்தக்கட்சியும் அதிமுகதான். 1984ல் அந்த புதிய சகாப்தத்தை நிகழ்த்திக் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். தமிழகம் இன்று கல்வியில் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டதும் புரட்சித்தலைவர் தான். அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான்.
அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களுக்கான இலவச மிதி வண்டி தொடங்கி… விலையில்லா மடிக்கணினிவரை வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தையும் அதிமுக நிறைவேற்றியிருக்கிறது. இப்படி.. ஆதிதொட்டு இன்றுவரை கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி தமிழகத்தை தலைசிறந்த கல்வி மாநிலமாக மாற்றிய அதிமுக தமிழக கல்வி வரலாற்றில் ஓர் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறது. அதிமுக கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நலதிட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருந்திருக்கிறது. ஏழைமக்களின் பசிபோக்கும் அம்மா உணவக திட்டம் அமெரிக்காவரை அதிமுகவின் புகழை கொண்டுசேர்த்துள்ளது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கெனவும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், பெண்கள் உள்ளாட்சிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கி சட்டமாக்கியது பெண்களின் நலனில் அதிமுக மாபெரும் சகாப்தமாக திகழ்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. தமிழக மக்களின் நாடித்துடிப்பாய் செயல்பட்டு நலத்திட்டங்களை தீட்டிய கலங்கரை விளக்கம்…அதிமுக ஓர் சகாப்தம்…

Exit mobile version