தமிழ்நாட்டின் பொற்காலங்களில் ஒன்று ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய ஆண்டுகள் ஆகும். அவர் அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்றுள்ளன, அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்….
தொட்டில் குழந்தை திட்டம்: பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டில் அம்மா அவர்களால் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது, இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளது.
மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்: ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுத்திட்டத்தின் மூலம் கடனுதவிப் பெற திட்டம் கொடுத்தார் அம்மா. இந்தத் திட்டம் இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றியது.
மழைநீர் சேகரிப்புத் திட்டம்: 2011-ம் ஆண்டில் அம்மா அவர்கள் கொண்டுவந்த ‘மழைநீர் சேகரிப்பு’த் திட்டம் உலக அளவில் பாராட்டுதல்களைப் பெற்றது. இத்திட்டத்தின் மூலம் மழைநீரை சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதைக் கண்டு இப்போது பல மாநிலங்களிலும் இத்திட்டம் அமலாகி உள்ளது.
மாணவர் உதவித் திட்டங்கள்: மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் முதல் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி வரை, புத்தகம், நோட்டு, புத்தகப் பை, காலணி, கணீத உபகரணப் பெட்டி என அனைத்தையும் அம்மா கொடுக்க, தமிழகம் உயர் கல்வியில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகவும், இடை நிற்றலில் கடைசி மாநிலமாகவும் ஆனது.
இவை தவிர திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம், பிரசவகால நிதி உதவித் திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மானியவிலை ஸ்கூட்டர் திட்டம், விலையில்லாப் பொருட்கள் திட்டம் என மிகப்பல மக்கள் நலத் திட்டங்களை வகுத்த முன்னோடி முதல்வராக அம்மா அவர்கள் எப்போதும் நினைவு கூறப்படுவார்.