மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான பரிசுப் பொருட்கள் வழக்கை வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதைப்போல அமைச்சர் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. 22 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.