தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளை பாதுகாப்பதற்காக, தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களையும், தர்மயுத்தங்களையும் நடத்தி வென்று காட்டினார். தமிழகத்தின் உரிமை நாட்டுவதில் யாருக்கும் தலை வணங்காமல், எதிர்த்து நின்று வீறுநடை போட்டு வென்றவர் தான் ஜெயலலிதா. மேலும் சட்டபூர்வமாக தமிழகத்தின் பிரச்சனைகளை சந்தித்து, ஒரு போதும் பின் வாங்காமல் தன்னுடைய நிலைப்பாட்டை நிலையாக நிறுத்தியவர் தான் ஜெயலலிதா.
காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட ஜெயலலிதா
தமிழகத்திற்கு நதி நீர் பங்கீட்டு தொடர்பாக அண்டை மாநிலங்களுடன் நிறை சட்ட பிரச்சனைகள் இருந்து வந்தது. அதில் மிக முக்கியமானது கர்நாடக உடனான காவேரி நதி நீர் பங்கீடு பிரச்சனை. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசு அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அதற்கு பதில் அளிக்காமல் மௌனம் மத்திய அரசிற்கு தன் கண்டனத்தை தெரிவித்ததோடு, பிரச்சனையை சட்டரீதியாக அணுக தொடங்கினார். மேலும் இது தொடர்பாக பல்வேறு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரவு பகலாக உழைத்து, சட்ட பூர்வமாக எட்டி கொண்டு வெற்றி பெற்று, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார் ஜெயலலிதா. மேலும் இந்த வெற்றியை டெல்டா மாவட்ட விவசாயாசிகளுக்கும், தமிழக மக்களுக்கும் அர்ப்பணம் செய்தார். ஜெயலலிதாவின் இந்த சட்ட நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
ராஜபக்சவை போர் குற்றவாளி என சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய வீர மங்கை
ஈழத்தில் தமிழ் இனத்தை கொன்று குவித்த ராஜபக்சவை ஒரு போர் குற்றவாளி என தமிழக சட்டசபையில் தைரியமாக தீர்மானத்தை கொண்டு வந்தார் ஜெயலலிதா. இந்த தீர்மானம் மூலம் தான் ஒரு வீர மங்கை என்று மீண்டும் நிரூபித்தார் ஜெயலலிதா.
முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை உயர வைத்த ஃபீனிக்ஸ் பறவை ஜெ
முல்லை பெரியார் அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை உயர்த்த ஜெயலலிதா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். அவரது இந்த நடவடிக்கைக்கு வெற்றியும் கிடைத்தது. மேலும் இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என சட்ட சபையில் பெருமிதமாக ஜெயலலிதா கூறினார்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் துயர் தொடைத்த ஜெ
தமிழகத்தின் இரும்பு பெண்மணி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஜெயலலிதா, மக்கள் விரும்பும் தலைவியாக போற்றப்பெற்றார். தன்னுடைய ஆட்சியில் மகத்தான அறிமுகப்படுத்திய ஜெயலலிதா மக்களிடம் நீங்கா அன்பை பெற்றார். அம்மா உணவகம், இலவச அரிசி, விலையில்லா மடிக்கணனி, விலையில்லா மிக்சி, கிரைண்டர், மருத்துவ காப்பீடு, தொட்டில் குழந்தை திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் துயரை துடைத்தார் ஜெயலலிதா. மக்களின் அன்பை பெற்ற ஜெயலலிதா தமிழக அரசியல் மட்டுமல்லாமல், இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக மாறினார்.
பெண்களுக்கான மகத்தான திட்டம்
1991ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின், பெண் சமுதாய பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். பெண் சிசு கொலை தடுக்கும் பொருட்டு, ஜெயலலிதா “தொட்டில் குழந்தை” திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மகளிர் காவல் நிலையம், பயண சமயங்களில், குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்ட, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிக கூடும் இடங்களில் தாய்மார்களுக்கான பாலூட்டும் தனி அறை, ஏழைகளின் பசி தீர்க்கும் அம்மா உணவகம், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணனி, தாய்மார்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மருத்துவ காப்பீடு, அம்மா மருந்தகம், மாற்று திறனாளி மற்றும் பெண்களுக்கு இரு சக்கர வண்டி என விண் அளவிற்கு போற்றும் வகையில் திட்டங்களை தமிழக மக்களுக்கு அளித்தவர் ஜெயலலிதா என்று சொன்னால் அது மிகையாகது.