ஜெ ஜெயலலிதா எனும் நான்!

இன்று பிப்ரவரி 24. ஒரு பெண் சிங்கம் உதித்த நாள். எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்தவர். மக்களால் நான் மக்களுக்காக நான் என்று கர்ஜித்தவர். புரட்சித் தலைவரின் அரசியல் வாரிசு. அதிமுகவின் தூண். அவர்தான் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி, புரட்சித் தலைவி, செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள். மக்களால் அன்போடு ‘அம்மா’ என்று அழைக்கப்பட்டவர். தமிழக அரசியலே மாற்றி அமைத்தவர். ஆண்களால் சூழ்ந்திருந்த அரசியல் களத்தை பெண்களுக்கான இடமாக மாற்றிய பெருமை புரட்சித் தலைவி அவர்களுக்கு உண்டு.

ஆதரவற்றக் குழந்தைகளுக்காக தொட்டில் குழந்தைத் திட்டத்தைத் தொடங்கி ஐ.நா சபையே பாராட்டும்படி செய்தவர் புரட்சித் தலைவி அவர்கள். இந்திய அரசியலின் முக்கிய ஆளுமையான ஜெயலலிதா அவர்கள் 1948 பிப்ரவரி 24ல் பிறந்தார். திரைப்பட நடிகையாக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் புரட்சித் தலைவரின் நற்பெயர் பெற்றார். அதன் விளைவாக கட்சி அரசியலுக்குள் நுழைந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் செங்கோல் கொடுத்து தனது அரசியல் வாரிசாகவே ஜெயலலிதா அம்மையாரை பாவித்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்தபோது ஜெயலலிதா அம்மையாரை ஊர்தியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள். அன்றைக்கு அவர் விழுந்தபோது தனியாகத்தான் விழுந்தார். ஆனால் திரும்பி எழுந்தபோது தமிழகமே எழுந்தது.

அதிமுகவின் கொள்கைப் பரப்பு செயலாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்த ஜெயலலிதா அவர்கள் பிற்காலத்தில் மாநிலங்களவை உறுப்பினரனார். நாடாளுமன்றத்தில் அவருக்கு 185 வது இருக்கை கொடுக்கப்பட்டது. அந்த இருக்கையில் அதற்கு முன் அமர்ந்த ஒரே நபர் அறிஞர் அண்ணா அவர்கள். எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக மாறினார். அதற்காக பல சிரத்தைகளை அவர் கடந்து வந்தார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் போடி நாயக்கனூர் தொகுதியில் வெற்றிபெற்று எதிர்கட்சித் தலைவரானார்.

தமிழகத்தின் முதல்வராக புரட்சித் தலைவி  ஜெயலலிதா அவர்கள், 1991 ஆம் ஆண்டு சூலை 24 ஆம் தேதி பதவியேற்றார். அன்றிலிருந்து ஐந்துமுறை அவர் தமிழத்தின் முதல்வராக பதவியேற்றார்.  ஜெ. ஜெயலலிதா எனும் நான் என்று அன்றிலிருந்து அவரது கர்ஜனைத் தொடர்ந்தது. இன்று அவர் மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்காமால் இருக்கிறார். அப்படிப்பட்ட புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு இன்று 75வது பிறந்தநாள் ஆகும்.

Exit mobile version