புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, சென்னை தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது முழு உருவச் சிலைக்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அங்குள்ள புரட்சித் தலைவர் மற்றும் புரட்சி தலைவியின் முழு உருவச் சிலைகள் அலங்கரிக்க வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், புரட்சித் தலைவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளும், புரட்சி தலைவி ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முழு உருவ சிலைக்கும் ஒருங்கிணைபாளரும், இணை ஒருன்கிணைப்பாளரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
அடுத்ததாக, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை தேர்தலில் அஇஅதிமுக சார்பாக போட்டியிட விரும்புபவர்களுக்காக விருப்ப மனு வழங்கும் பணியை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதைதொடர்ந்து, புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு, 73 கிலோவிலான கேக்கை, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெட்டி, தொண்டர்கள் வழங்கினர்.
அதேபோல், பொதுமக்கள், தொண்டர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த அன்னாதான உனவையும் அவர்கள் வழங்கினர்.