20 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறிப்போம், பிரிந்து சென்றவர்களுக்கு மீண்டும் அழைப்பு – மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

20 தொகுதி இடைத்தேர்தலில் வென்று வெற்றிக்கனியை பறிப்போம் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

திமுக ஆட்சி காலத்திலும் டெங்கு,நிமோனியா,காலரா போன்ற நோய்கள் இருந்ததை சுட்டிக்காட்டிய அவர், அப்போது இறந்தவர்களில் எண்ணிகையை பட்டியலிட்டார். இதையெல்லாம் மறந்து விட்டு ஸ்டாலின் தற்போது வானத்தில் இருந்து குதித்தவர் போல பேசுவதாக விமர்சித்தார்.

20 தொகுதிகளிலும் வென்று வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் சூளுரைத்தார். குப்புற விழுந்த பின்னும் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறுவது ஏன் என கேள்வி எழுப்பினார். சசிகலா குடும்பத்தினரை தவிர்த்து, பிரிந்து சென்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீண்டும் கட்சிக்கு வரலாம் என ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார்.

 

 

Exit mobile version