ஸ்டாலின் மற்றும் தினகரன் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரண திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா 4 ஆயிரத்து 500 ரூபாயை நிவாரணத் தொகையாக அவர் வழங்னார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
2 லட்சம் மீனவர்களுக்கு 62 கோடி நிவாரணமாக வழங்கப்பட உள்ளதாக கூறிய அவர், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், மீனவ குடும்பத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 19 ஆயிரம் நிவாரணமாக அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தினகரன் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டினார்.