நாட்டிற்காக தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளார் தூத்துக்குடி ராணுவ வீரர் சுப்பிரமணியன். இவர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்த கணபதி, மருதாத்தாள் தம்பதியருக்கு பிறந்தவர் சுப்பிரமணியன். 28 வயதான இவர், நாட்டின் மீது கொண்ட மிகுதியான பற்றால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தின் சிஆர்பிஎஃப் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
முதன் முதலில் நாட்டிற்கான தனது பாதுகாப்புப் பணியை உத்திரபிரதே மாநிலத்தில் தொடங்கி, கடைசியாக காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பணியாற்றினார். கடந்த ஆண்டு திருமணமான இவர், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்து, தனது மனைவி கிருஷ்ணவேனி மற்றும் குடும்பத்தினருடன் கடைசியாக தங்கிச் சென்றுள்ளார். கடந்த 14 ஆம் தேதி மதியம் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தொலை பேசியில் பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து, தனது பணியை மேற்கொண்ட அவர், அன்று பிற்பகல் 3.20 மணி அளவில் ஜெய்ஷ்.இ.முகமது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப்படை தாக்குதலில் உடல் சிதறி வீரமரணம் அடைந்தார்.
நாட்டிற்காக உயிர்தியாகம் செய்து பெருமை தேடி இருந்தாலும் என், சகோதரனை இழந்து தவிக்கும் நிலை தன்னை தாழாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்கிறார் சவீரர் சுப்பிரமணியனின் அண்ணன்.
குணத்திலும், பேச்சிலும் பிறர் மனம் நோகதபடி வாழ்ந்தவர் வீரர் சிப்பிரமணியன் எனவும், பிள்ளையை இழந்துள்ளது தாங்க முடியாத சோகத்தில் தள்ளியுள்ளது என உறவினர்கள் குமுறுகின்றனர்.
நண்பன் என்ற வார்தைக்கு மறு உறுவம் வீரர் சுப்பிரமணியன் என அவரது நண்பர்கள் கூறுகின்றனர். சிறுவயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்பதுதான் சுப்பிரமணியனின் குறிக்கோளாக இருந்தது எனவும், இதற்காக இரவு, பகல் பார்க்காமல் அயராது உழைத்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.
தன் இன்னுயிரை நாட்டிற்காகவே தியாகம் செய்த வீரர் சுப்பிரமணியன் மரணிக்கவில்லை, நாட்டுக்காக போராட விரும்பும் பல இளைஞர்களின் ரூபத்தில் வீரத்தோடு மீண்டெழுவார்.