செண்டு மல்லியை இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரிகளே நேரிடையாக கொள்முதல் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே காவலப்பட்டியில் செண்டு மல்லி, கோழி கொண்டை போன்றவை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இவற்றை இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்ததால் குறைந்த அளவிலே லாபம் கிடைத்து வந்ததாக விவசாயிகள் குறை கூறுகின்றனர். தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதோடு, வியாபாரிகள் நேரிடையாகவே வந்து கொள்முதல் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.