கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகரித்துள்ள செண்டுமல்லி பூ

திண்டுக்கல்லில் செண்டு மல்லி பூ விளைச்சல் அதிகமாக உள்ளதால் மாவட்டத்தில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலகிருஷ்ணாபுரம், புளியம்பட்டி, ஒத்தக்கடை ஆகிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செண்டுமல்லி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் பூவின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனையான செண்டு மல்லி பூ தற்போது 10 முதல் 15 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் பறிப்பு கூலிக்குக் கூட பணம் போதவில்லை எனக் கூறும் விவசாயிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் நறுமணப் பொருள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version