மல்லிகை பூ பயிரிட்டால் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்கலம் புதூர் விவசாயிகள்.
கீழ்பென்னாத்தூர் அடுத்த மங்கலம் புதூர் கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் மல்லிகை பூ பயிர் பயிரிடுவதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர். நிலத்தில் 5 அடி இடைவெளி விட்டு மல்லிச் செடி நடப்பட்டு 1 வருடத்திற்குப் பிறகு பூ வரத் தொடங்கி விடுகிறது. இதற்கு குறைந்த தண்ணீர், உரம் இருந்தால் போதுமானது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து பயன்படுத்தி வருகின்றனர். 1 நாளைக்கு 50 சென்ட் நிலத்தில் 7 கிலோ முதல் 12 கிலோ பூ வரை கிடைப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.