ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள செண்டு மல்லியின் விலை விழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, சிக்கரசம்பாளையம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில் செண்டு மல்லி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக செண்டு மல்லியின் விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், திடிரென பூவின் வரத்து அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக, விலை கிலோ 8 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கடுமையாக விழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பூக்கள் பறிக்கும் கூலி மற்றும் சாகுபடி செலவிற்கு கூட கட்டுப்படியாகவில்லை என, செண்டுமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.