கார்த்திகை மாதம்-விளைச்சல் இல்லாததால் மதுரையில் மல்லிகைப்பூவின் விலை ரூ.1500 வரை விற்பனை

மதுரையில் வரத்து குறைவால் ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ வரத்து வெகுவாக குறைந்துள்ளது. மல்லிகைப்பூ செடிகளின் முனைகளை விவசாயிகள் நறுக்கி விட்டுள்ளதாலும் பூக்கள் வரத்து இல்லாமல் இருக்கிறது. அதே நேரம் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பூவின் தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து மதுரையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரம் முதல் ஆயிரத்து 500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

 

 

 

Exit mobile version