ஜேப்பியார் கல்விக் குழுமத்தில் வருமான வரி சோதனை

சென்னையில் ஜேப்பியார் கல்விக் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில், காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள், நிர்வாகிகளின், எழும்பூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள வீடுகள் போன்ற இடங்கள்
என, சென்னையில் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையில், சுமார் 130 அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனை மேலும் விரிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த பல வருடங்களாக வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த சோதனை நடைபெறுகிறது. மாணவர்களிடம் வாங்கிய கல்விக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சோதிக்க வேண்டியிருக்கும் என்பதால், இந்த வருமான வரி சோதனை, மேலும் சில நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வாய்ப்பு உள்ளது.

Exit mobile version