ஜப்பானில் உள்ள ஃபூஜி மலை அடிவாரத்தில், அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஜப்பானில் கடந்த 1961ஆம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் ராணுவ வீரர்களின் இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றனர். அந்தவகையில், ஃபூஜி மலை அடிவாரத்தில் நடந்த இந்த ஒத்திகையில், 2 ஆயிரத்து 400 படை வீரர்கள் பங்கேற்றனர். ராணுவ ஆயுதங்களான 80 பீரங்கிகள், 20 ராணுவ விமானங்களுடன் வந்த வீரர்கள், மலையடிவாரத்தில் ஆங்காங்கு அமைக்கப்பட்டிருந்த இலக்குகளை நோக்கி குண்டுகளை பொழிந்து, அதனை அழித்தனர். மேலும் போர்க்காலங்களில் ராணுவ வீரர்கள் எவ்வாறு செயல்பட்டு எதிரிகளை வீழ்த்துவது என்பது குறித்தும் செய்து காண்பித்தனர். இதனை காண திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள், பாதுகாப்பு படையினரின் சாகச செயலை வியந்து பாராட்டினர்.