ஜப்பான் தூதரகம், ஜப்பான் பவுண்டேஷன் மற்றும் சென்னை திரைப்பட அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் ஜப்பான் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜப்பான் திரைப்பட திருவிழாவின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஜப்பான் பவுண்டேஷன் தலைவர் கென்னடி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், மெட்ராஸ் பிலிம் சொசைட்டி தலைவர் நல்லி குப்புசாமி, ஜப்பான் பவுண்டேஷன் துணைத் தலைவர் ரூஸ்வெல்ட், சுபாஷ் சந்திரன், திரைப்பட நடிகை நிரோஷா, ராதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற எ டேல் ஆஃப் சாமுராய் குக்கிங் ((A tale of samurai cooking)) என்ற ஜப்பானிய மொழி திரைப்படம் திரையிடப்பட்டது. இன்று மற்றும் நாளையும் ஜப்பானிய திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.