ஜன.1 முதல் 7 வரை வேட்டிகள் வார கொண்டாட்டம்

வேட்டி வாரத்தையொட்டி நாளை முதல் வரும் 7ம் தேதி வரை 7 வண்ணங்களில் பேன்சி கலர் சட்டையுடன் கூடிய வேட்டிகளை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனம் பல வண்ணங்களில், ரகங்களில் வேட்டிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.மறைந்துவரும் நமது பாரம்பரிய உடையான வேட்டியை மீட்டு, அனைத்து தரப்பினரும் வேட்டி அணியவும், விவசாயிகளை கவுரவப்படுத்தும் வகையிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை வேட்டி வாரத்தை கொண்டாடி வருகிறது.நாளை வேட்டிகள் வாரம் துவங்குவதையொட்டி புதிதாக 7 வண்ணங்களில் 700 ரூபாயில் புதிய ரகத்தில் சட்டையுடன் கூடிய வேட்டியை ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பூரில் துவக்கி வைத்துள்ளார்.

Exit mobile version