ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் 3வது லீக் ஆட்டத்தில், ஒடிசா எஃப்.சி அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி அணி வீழ்த்தியது.
ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற ஐ.எஸ்.எல் தொடரின் 3 லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் எஃப்.சி அணியும், ஒடிசா எஃப்.சி அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கிய 17 வது நிமிடத்தில் ஒடிசா அணியின் சொதப்பலால் ஜாம்ஷெட்பூர் அணி கோல் அடித்தது. இதனையடுத்து பரப்பாக நடந்த முதல்பாதியின் முடிவில் ஒடிசா அணியினர் பதில் கோல் அடித்து வியக்க வைத்தனர்.
இதனால் முதல் பாதி 1-1 சமனில் முடிந்த நிலையில், 2 ஆம் பாதியில் இரு அணியினருக்கும் கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து இரு அணிகளின் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், 85 வது நிமிடத்தில் ஜாம்ஷ்ட்பூர் அணி வீரர் காஸ்டல் ஒரு கோல் அடித்து வெற்றியை எளிதாக்கினார். இதனால் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர் எஃப்.சி. அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், இன்று நடைபெறும் 4 வது லீக் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி எஃப்.சி. கோவா அணியை இன்று எதிர்கொள்கிறது.