ஜம்மு – பாரமுல்லா தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து நாளை தொடக்கம்

ஜம்மு – பாரமுல்லா இடையே 3 மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்து மீண்டும் நாளை தொடங்க உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கும் அரசியலமைப்பின் 370ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதையடுத்துப் பாதுகாப்புக் காரணங்களுக்காக முன்னெச்சரிக்கையாக ஜம்மு – பாரமுல்லா இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நாளை போக்குவரத்து தொடங்க உள்ளதால் ஸ்ரீநகரில் ரயில் இயக்கி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ரயில் பாதையெங்கும் பனிமூடிக் கிடக்கும் நிலையில் ரயில் மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டது.

Exit mobile version