ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை காவல்துறையினர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தரும், சட்டப்பிரிவு 35-ஏ வை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு குறித்து விசாரணை விரைவில் நடைபெறலாம் என்பதால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான யாசின் மாலிக்கை, காவல்துறையினர் கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.