ஜம்மு காஷ்மீர் விவகாரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவு

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. இதனையடுத்து மாணவர்கள் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்பதால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, தமிழகம் முழுவது பாதுகாப்பை தீவிரப்படுத்த டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக காவல்துறை மண்டல ஐ.ஜி.க்கள் மற்றும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

Exit mobile version