ஏலத்திற்கு வரும் ஜேம்ஸ் பாண்ட் கார்

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு விடப்படுவதையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பிரபல ஹாலிவுட் கதாபாத்திரமாக ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக அந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் தொழில்நுட்பக்கருவிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அந்த வகையில் 1964 மற்றும் 65 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படமான கோல்ட் ஃபிங்கர் மற்றும் தண்டர்பால் படங்களில் பயன்படுத்தப்பட்ட அஸ்டன் மார்டின் டிபி 5 ரக கார் ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த இந்த கண்காட்சியில் சுழலும் எண் தட்டைக் கொண்ட இந்த காரானது படத்தில் காட்டப்பட்ட அனைத்து வசதிகளுடனும் ஏலத்திற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. கண்காட்சிக்கு பின்னர் அடுத்த மாதம் இந்த கார் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும் 27 கோடியே 55 லட்ச ரூபாய் முதல் 41 கோடியே 33 லட்ச ரூபாய் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version