குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வாணியம்பாடி ஜமாத் நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் முகமது ஜான் தலைமையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்றனர். அங்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.