"ஜல்லிக்கட்டு" ; 150 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு போட்டியில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது கொரோனா தொற்று தடுப்புக்காக அரசு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பார்வையாளர்கள், மாடுகளின் உரிமையாளர்கள், நிகழ்ச்சி மேற்பார்வையாளர்கள் உள்பட அனைவரும், கொரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான பரிசோதனை சான்று பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதே போன்று, எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியை பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாடுகளுடன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் என இருவருக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version