மதுரை பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதி ஜல்லிகட்டு நடத்த விழா கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டிகள் வருடந்தோறும் ஜனவரி 15ஆம் தேதி நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜல்லிகட்டு போட்டி நடத்துவது குறித்து பாலமேடு கிராமத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் திட்டமிட்டப்படி 2021ல் ஜனவரி 15ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து அனுமதி தர முன்வர வேண்டும் எனவும், அரசு வழிகாட்டுதலின்படி போட்டிகளை நடத்த தயாராக உள்ளதாகவும் விழா கமிட்டியினர் கூறியுள்ளனர். ஜல்லிகட்டு நடைபெற்றால் வழக்கம் போல் முதல் பரிசாக கார் வழங்கப்படும் என கமிட்டி அறிவித்துள்ளது.