ஜல்லிக்கட்டு, தமிழ் இன வீரத்தின் அடையாளம்

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் தயாராகி வரும் காளைகள் மற்றும் காளையர்கள் பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்…

ஜல்லிக்கட்டு, தமிழ் இன வீரத்தின் அடையாளம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரிய வீரவிளையாட்டு. ஆயிரம்தான் விளையாட்டுக்கள் இருந்தாலும், கிராமத்து இளைஞர்களின் மனதில் இருந்து அகற்ற முடியாத வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு…

ஜல்லிக்கட்டின்போது திமிரிக்கொண்டு வரும் காளைகளும் தில்லோடு எதிர்க்கும் காளையர்களும் இதற்காக பல மாதங்கள் பயிற்சி பெருகின்றனர். அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பள்ளப்பட்டி, கிருஷ்ணபேரி, திருத்தங்கல், வடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிக்கு தயாராகி வருகின்றன.

வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க காளை மருது நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, கொம்பால் மண்ணை குத்திக்கிளறும் பயிற்சி என தீவிரமாக தயாராகி வருகிறது. தனித்துவமான உணவுகள் வழங்கப்படுகின்றன.

இதேபோல், பிடிக்கு அடங்காத காளைகளை அடக்க மாடு பிடி வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து அதற்காக தயாராகி வருகின்றனர். காளைகளை அடக்க பலத்தை விட, தைரியமும், வீரமும் தான் முக்கியம்.

Exit mobile version