சேலம் மாவட்டம், ஆத்தூரில் வரும் 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில் கால்கோள் விழா நடைபெற்றது.
ஆத்தூரை அடுத்த புத்திர கவுண்டம்பாளையத்தில் வரும் 23ஆம் தேதி அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் பங்குபெறும் காளைகள், வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ள விழா குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. கூட்டுறவு வங்கி தலைவரும் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான இளங்கோவன், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாடிவாசல் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தனர்.
Discussion about this post