புதுக்கோட்டை மாவட்டம் கீழதானியத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது.
மாவயல் காட்டு அய்யனார் கோயில் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்கின. வாடிவாசல் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். களத்தில் நின்று விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், ஜல்லிக்கட்டு போட்டியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.