சந்தியாகப்பர் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி

புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் ஆலய தேர் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 650 காளைகள் மற்றும் 350க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றனர். விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். போட்டியில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் காளையர்களுக்கு தங்க காசு, வெள்ளி காசு, உள்ளிட்ட பலவற்றை பரிசாக வழங்கப்பட்டது.

Exit mobile version