நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வரும் காளைகளை இளைஞர்கள் ஆர்வத்துடன் அடக்கி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியை மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து, மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.