திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் ஜல்லிக்கட்டுப் போட்டியை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருப்பூரை அடுத்த அலகு மலையில் இரண்டாவது முறையாக திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்படும் போட்டியை தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்தப் போட்டியில் 500 காளைகளும், 550 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முதல் கட்டமாக 30க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.