அரியலூர் மாவட்டம் மேல மைக்கல் பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கியது பார்வையாளர்களை கவர்ந்தது.
அரியலூர் மாவட்டம், மேல மைக்கல்பட்டியில் இந்த ஆண்டிற்க்கான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.இந்த போட்டியினை அதிமுக தலைமை கொறடா தாமரை. ராஜேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டில், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 500 காளைகள் பங்கேற்றன. 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில், காளைகளை அடக்கிய இளம் காளையர்களுக்கு, தங்கம், வெள்ளிக் காசுகள், பேன், கட்டில்,சோபா, மிக்சி, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை,10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.