கபினி அணை பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், காவிரில் வெள்ள அபாயம் ஏற்படும் என்று மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
கர்நாடகாவின் கபினி நீர்பிடிப்பு பகுதிகளில் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர் மழையால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்தநிலையில், மீண்டும் கனமழை பெய்தால், அணைக்கு வரும் நீர் முழுமையாக காவிரியில் திறக்கப்படும். எனவே, காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்று ஜல்சக்தி அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உபரி நீர் திறப்பால் 24 மணி நேரத்தில் மேட்டூர் அணைக்கு 5 முதல் 6 டி.எம்.சி., வரை நீர்வரத்து இருக்கும் என்றும், எனவே, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.