கேரளாவில் கடற்கரை பகுதியில் தடையை மீறி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிய ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
கேரளாவில் கடற்கரை பகுதியில், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு விரோதமாக, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியது தொடர்பான முறைகேட்டில் சந்தீப் மேத்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். இந்நிலையில், முன் ஜாமீன் உத்தரவில் தவறான குற்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளதால், உத்தரவில் திருத்தம் கோரி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதில் அரசு தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், முன்ஜாமீன் வழங்க கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி, ஜெயின் ஹவுசிங் கட்டுமான நிறுவன அதிபர் சந்தீப் மேத்தாவின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.