இந்தியாவில் ஆன்லைன்களில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பு அதிகமாக உள்ளது. நேரம், காலம் எதுவும் இல்லாமல் கிடைப்பதால் நாளுக்கு நாள் இதற்கான தேவைகள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கேரளாவில் உள்ள வையூர் மத்திய சிறையானது உணவுக்கு பெயர் பெற்றது.இந்த சிறையில் இருக்கும் கைதிகளால் செய்யப்படும் நாள்தோறும் தேவைக்கு அதிகமாக செய்யப்படும் உணவை 2011ம் ஆண்டு முதல் விற்பனை செய்ய தொடங்கியது. ‘
இதனை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான “ஸ்விக்கி”யுடன் இணைந்து ரூ.127க்கு 300கி பிரியாணி, சிக்கன் லெக் பீஸ், 3 சப்பாத்திகள், கப் கேக், ஊறுகாய், தண்ணீர் பாட்டில் கொண்ட காம்போ பேக்கேஜை அறிமுகம் செய்துள்ளது. இந்த காம்போ உணவிற்கு ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்து வருகிறது.