இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வந்த தேசிய தவ்ஹித் ஜமாத் தலைவர் ஜக்ரன் ஹஸிம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில், ஷான்கிரி லா நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலின் போது, ஜக்ரன் ஹஸிம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது வரை 130 முதல் 140 தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக ஏப்ரல் 4-ம் தேதியே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால், பாதுகாப்புத்துறை செயலரும், காவல் ஆணையரும் தமக்கு தகவல் அளிக்கவில்லை என்றும் அதிபர் சிறிசேன கூறியுள்ளார்.