பொங்கல் பண்டிகையையொட்டி சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தைத்திருநாளையொட்டி, தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் வெல்லம், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனையான ஒரு மூட்டை வெல்லம், தற்போது ஆயிரத்து 400 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பொங்கல் பண்டிகைக்கு, சர்க்கரைக்கு பதிலாக, வெல்லத்தை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.