ஆந்திராவிற்கு 3 தலைநகரங்கள் அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு திட்டம்

ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்களை அமைப்பதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ஆந்திர பிரதேசத்தின் தலைநகர் அமையும் பகுதி பற்றி முடிவு செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த குழு ஆய்வு செய்து 2 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும்,  ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்வதற்காக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 தலைநகரங்களில், ஒன்று சட்டமன்ற தலைநகராகவும், மற்ற இரண்டும் நிர்வாக மற்றும் நீதிமன்ற தலைநகராகவும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதி சட்டமன்ற தலைநகராகவும் மற்றும் கர்னூல் நீதிமன்ற தலைநகராகவும் அமையும் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Exit mobile version