தமிழக அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்று ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சமபந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆந்திரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிகாரிகள் குழு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்தனர். சென்னையில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 90 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். எனவே, சென்னை குடிநீர் பிரச்சினையை போக்க ஆந்திரவிலிருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய கிருஷ்ணா நதி நீரை நீரை திறந்துவிட கோரிக்கை விடுத்தனர். அமைச்சர்களின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்க, தேவையான கிருஷ்ணா நதி நீரை உடனடியாக திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழகத்திற்கு தர வேண்டிய 8 டி.எம்.சி தண்ணீரையும் தர, ஆந்திர அரசு ஒப்புக்கொண்டதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.