யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் மூவருக்கு ஜாமீன்

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் நடந்த சோதனையில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததால், பல்கலைக்கழகத்தின் மாணவ ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் உணவகம் நடத்துபவர் ஆகிய மூவரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மூவரையும் பிணையில் விடுவிக்க யாழ்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version