உலக புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று நடை திறக்கப்படுகிறது.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை ஒவ்வொறு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் திறக்கப்படும்.
அந்த வகையில் மாதாந்திர வழிபாட்டிற்காக இன்று மாலை ஐந்தரை மணிக்குத் திறக்கப்பட்டு வழிபாடுகள் செய்து முடித்தப்பின் இரவு பத்தரை மணிக்கு அடைக்கப்படவுள்ளது.
அதன்பிறகு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது. சபரி மலை ஐயப்பன் கோயில் நடை திறப்பை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.