இந்த டிரெய்லருக்குத்தான் இவ்ளோ டிஸ்லைக் – ஏன் தெரியுமா?

பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிப்பில் வெளிவந்த சதக் 2 படத்தின் டிரெய்லர் யு டியூப்பில் அதிக டிஸ் லைக்குகளை பெற்று படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ரசிர்களின் கோபக்கனல் இதன்மூலம் வெளிப்பட்டுள்ளது

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் மர்மான முறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை தொடர்பாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி, தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு நடிகை ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட்டே காரணமென சுஷாந்த் சிங்கின் ரசிகர்கள் நம்பி வருகின்றனர். மகேஷ் பட்டின் இயக்கத்தில் தயாராகியுள்ள சதக் 2 திரைப்படத்தில், ஆரம்பத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பதாக இருந்தது

இந்நிலையில் சில காரணங்களுக்காக சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நீக்கிய படக்குழுவினர், ஆதித்ய ராய் கபூரை படத்தின் ஹீரோவாக தேர்ந்தெடுத்தனர். மகேஷ் பட், திட்டமிட்டே சுஷாந்த் சிங் ராஜ்புத்தை படத்திலிருந்து நீக்கியதாக ரசிகர்கள் குற்றம் சுமத்துகின்றனர். சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தியுடன், மகேஷ் பட் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மகேஷ் பட்டின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த சுஷாந்த் சிங்கின் ரசிர்கள் முழுக் கோபத்தையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளனர். மகேஷ் பட் இயக்கி, ஆதித்ய ராய் கபூர், ஆலியா பட் நடித்துள்ள சதக் 2 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, சதக் 2 படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான டிஸ் – லைக்குகளை பெற்று, உலகின் மிகவும் விரும்பப்படாத டிரெய்லராக மாறியுள்ளது. முன்னதாக 2016 ஆம் ஆண்டு வெளியான கோஸ்ட்பஸ்டர் திரைப்படமே அதிக டிஸ் லைக்குகளை பெற்றிருந்தது.

தங்களுடைய வெறித்தனமான நடவடிக்கையின் மூலம், மகேஷ் பட்டின் திரைப்படங்களை புறக்கணிப்பதாக ரசிகர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். சதக் 2 படத்தின் டிரெய்லரில் ஏற்பட்ட இந்த பின்னடைவு இணையத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version