பணிக்கு வரும் ஊழியர்கள் வேலை நேரத்தில் restroom-ல் டைம்பாஸ் செய்வதை தடுக்க வித்தியாசமான செயலை நிறுவனங்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக இந்திய மக்கள் இந்திய மாடல் கழிவறைகளை விட வெஸ்டர்ன் மாடல் கழிவறைகளை வசதியாக இருப்பதாக கருதுகின்றனர். ஆனால் நிறுவனங்களில் உள்ள restroom-ஐ பயன்படுத்துவர்கள் பெரும்பாலும் அங்கு செல்போன்கள் உபயோகித்தவாறு அதிக நேரம் செலவழிப்பதாக பெருமளவில் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.
BREAKING NEWS: Say goodbye to comfort breaks! New downward-tilting toilets are designed to become unbearable to sit on after five minutes. They say the main benefit is to employees in improved employee productivity. pic.twitter.com/lfDbeXJdCX
— Dave Vescio (@DaveVescio) December 17, 2019
இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் வித்தியாசமான முடிவை மேற்கொண்டுள்ளனர். அதன்படி restroom-களில் 13 டிகிரி சாய்ந்த நிலையில் வெஸ்டர்ன் மாடல் கழிவறைகளை அமைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன. இதனால் அதிக நேரம் உங்களால் அமர்ந்திருக்க முடியாது. அப்படி உட்காரும் போது கால் பாதத்தில் இருந்து அழுத்தம் ஏற்பட்டு மூட்டுப்பகுதியில் வலி ஏற்படும். இந்த மாடல் கழிவறைகளை அமைக்க பெரும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.