ஐ.டி.ஐ. மாணவரின் மரணத்தையடுத்து சக மாணவர்கள் போராட்டம்

ஹரியானாவில் ஐ.டி.ஐ மாணவரின் மரணத்தை தொடர்ந்து சக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

ஹரியானாவை சேர்ந்த ஐ.டி.ஐ மாணவரான அன்கிட், பேருந்தில் பயணம் செய்தபோது,அதிலிருந்து தவறு விழுந்து உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு பேருந்து ஓட்டுநரின் அஜாக்கிரதையே காரணம் என்று மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், அன்கிட்டின் மரணத்தை தொடர்ந்து சக மாணவர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது.

காவல்துறையினர் மீது மாணவர்கள் கல்லெறி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். வன்முறையில் ஈடுபட்டோரையும் கைது செய்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.

Exit mobile version