குன்னூர் டிரம்லா பகுதியில் இரவில் வலம் வந்த கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி இரவு கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் அளக்கரை அருகே டிரம்லா பகுதியில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரத்தில் அரிய வகை ஒரு கருஞ்சிறுத்தையும், அதனைத் சிறுத்தை ஒன்றும் உலா வருவது அங்குள்ள ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது பரவி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிரம்லா பகுதி அருகேயுள்ள எமகுண்டு கிராமத்தில் 4 ஆடுகளை இந்த சிறுத்தைகள் தான் வேட்டையாடி இருக்கலாம் என தெரிகிறது. சிறுத்தைகளின் நடமாட்டத்தையும், அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.