சென்னையில் சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களில் ஐ.டி ரெய்டு

சென்னை சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, 150 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்கள், ஹாட் பிரட் பேக்கரி, கிராண்ட் ஸ்வீட்ஸ் நிறுவனங்களிலும், ஜனவரி 3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உரிமையாளர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 32 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாடுகளில் திரட்டும் வருவாயை மறைத்தும், 150 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக் கொண்டு, மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version