பல்வேறு மாநிலங்களில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் உள்ள நீட் பயிற்சி மையங்களில் நடைபெற்ற சோதனையில் 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 100 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 17 நீட் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நாமக்கல்லில் இயங்கி வரும் நீட் பயிற்சி மையம் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 30 கோடி ரூபாய் வரை கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கரூர் தனியார் பள்ளியிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை நடத்திய சோதனையில் 150 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.